(எஸ்.அஷ்ரப்கான், எம்.என்.எம்.அப்றாஸ், நூறுள் ஹுதா உமர், ஏ.எச்.எம்.ஹாரிஸ், எம்.எம்.ஜபீர்)

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்  இளையோருக்கான இருநாள் இலவச ஊடக செயலமர்வு இன்று (21) சனிக் கிழமை  மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபத்தில் ஆரம்பமானது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மாணவிகள் 40க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் கட்டுரை எழுதுதல் மோஜோ ஊடகவியல் (Mojo Journalism) ஆகியவை கற்பிக்கப்படுகின்றது.

இச்செயலமர்வு நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் அறிமுக உரையாற்றினார். 

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் திட்ட இணைப்பாளர் எம்.பிரதீபன் நிகழ்வு பற்றிய விளக்க உரையாற்றியதுடன்
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பயிற்றுவிப்பாளர் என்.மணிவாணன் பங்குபற்றுனர்களுக்கு சிறப்பாக விரிவுரையாற்றினார். 

இதில் சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், உப தலைவர் எஸ்.அஷ்ரப்கான், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர் எம்.என்.எம்.அப்ராஸ், உறுப்பினர் ஏ.எச்.எம்.ஹாரிஸ்  உட்பட  அம்பாறை சிரேஷ்ட ஊடகவியலாளர் ரவீந்திர மெதகெதர எனப்பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours