(காரைதீவு  சகா)

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர் அனுமதி நேற்று (30) திங்கட்கிழமை இடம்பெற்றது.

நாடெங்கிலும் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவான சுமார் 90 மூவின மாணவர்கள் பதிவுக்காக பெற்றோர்களுடன் வருகை தந்திருந்தனர்.

முறையான பதிவுகளின் பின்னர் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி டாக்டர் ரி.சதானந்தன் தலைமையில் அங்குரார்ப்பண வைபவம் பிள்ளையாரடியிலுள்ள மருத்துவ பீடத்தில் இடம் பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.கனகசிங்கம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours