(வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சிதைந்த பழமையான ஆலயமான ஆலங்குளம் சிவாலயத்தில் நேற்று பொங்கல் விழா இடம் பெற்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் சமய ஆர்வலர்கள் ஒன்று கூடி இவ் விழாவை சிறப்பாக செய்தனர்.

சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆலங்குளம் ஆலயத்திற்கான நிர்வாகிகளுடன் இணைந்து நடாத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகஸ்தர் கு. ஜெயராஜ் மற்றும் அனைத்து ஆலயங்களின் தலைவர் கு.வடிவேல் சமய ஆர்வலர்கள் ஆலய நிர்வாகிகள் சிவில் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 இந் நிகழ்வில் தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பம் யோகாசனம் போன்ற வற்றை வளவாளர் குமாரதாசன் நிகழ்த்தியதோடு வளத்தாப்பிட்டி சத்திய சாயிசேவா நிலையத்தினரின் பஜனையும் இடம்பெற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours