இச்சாதனை பாடசாலை வரலாற்றில் இரண்டாவது மைல் கல்லாகும். 2020 ஆம் ஆண்டில் இதே பாடசாலையைச் சேர்ந்த ஷான் ஜொகிர்தன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை நிலைநாட்டியதாக அதிபர் அருட்சகோதரி எம். சிறியபுஷ்பம் தெரிவித்தார்.
அதேவேளை இப்பாடசாலையில் இருந்து எஸ்.ஆன்சுஹல்யா 160 புள்ளிகளையும், எஸ்.ஏஞ்சலிஸ்ரன் 157 புள்ளிகளையும், சி. ஜெரொமி சாறுக்கா 144 புள்ளிகளையும், ஏ. மிதுர்சிக்கா 144 புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்ததோடு பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் 70 புள்ளிக்கு மேல் பெற்று 100 வீதம் சித்தியடைந்தமை குறிப்பிடதக்கது. இவ்வாறு இப்பாடசாலையில் சாதனைகளை படைத்த மாணவர்களை கற்பித்த ஆசிரியர் எஸ். லோகேஸ்வரன் மற்றும் உதவிகளைச் செய்த ஏனைய ஆசிரியர்களையும் அதிபர் பாராட்டியுள்ளார்
.jpeg)
.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours