( காரைதீவு சகா)
தமிழில் முதல் இலக்கண நூலான அகத்தியம் என்னும் நூலை உலகுக்கு அளித்து தமிழுக்கும் சைவத்திற்கும் அளப்பரிய தொண்டாற்றிய அகத்திய மாமுனிவர் பிறந்த தினத்தன்று கங்குவேலி அகத்தியர் ஆலயத்தில் அதே துறையில் மிளிரும் ஐந்து பிரபல பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிவரும் அவர்களது சேவையை பாராட்டி சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு ஸ்ரீ சிவசங்கர் ஜி இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
சித்தர்கள் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத் தலைவர் மனோகரன், சிவயோகி மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து இக் கௌரவத்தை நேற்று முன்தினம் வழங்கினார்கள்.
அகத்தியர் தேவஸ்தானத்தின் தலைவர் ஓய்வு நிலை அதிபர் வே.தவராஜா உலகப்புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் ஈழநல்லூர் ஸ்ரீ பாலகுமாரன், இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா உலகப் புகழ்பெற்ற தவில் சக்கரவர்த்தி ஸ்ரீ செந்தில் மற்றும் அகத்தியர் ஸ்தாபன மூத்த சேவையாளர் அதிபர் கே. கணேசலிங்கம் ஆகியோர் இந்திய பொன்னாடை போர்த்தப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.





Post A Comment:
0 comments so far,add yours