(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தலும் RESUME II எனும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான அழகுக்கலை மற்றும் தையல் பயிற்சிகள் புதுக்குடியிருப்பு இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டிருந்தது.

அப் பயிற்சியினை நிறைவு செய்த 14 மாணவிகளை ஊக்குவிக்கும் முகமாக சிறிய அளவிலான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி குகதாஸ் தலைமையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன், புதுக்குடியிருப்பு தொழிற்பயிற்சி நிலையத்தின் போதனாசிரியர்கள், அம்கோர் நிறுவனத்தின் ஊழியர்கள்  மற்றும் பயிற்சி பெற்ற மாணவர்கள், புதிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

பயிற்சி பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த அழகுக்கலை நிபுணர்களாக தம்மை மாற்றிக்கொள்வது தொடர்பிலும் தையல் கலையில் சிறந்து விளங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours