(எம்.என்.எம்.அப்ராஸ்)

 பாலமுனை றைஸ்டார்விளையாட்டுக்கழகத்தின் அனுசரனையோடு பாலமுனை மின்ஹாஜ் மகா விததியாலயத்தில்(தேசிய பாடசாலை) கராத்தே பயிற்சி அங்குரார்பண நிகழ்வு கழகத்தலைவர் ஐ.எல்.எம்.
பாயிஸ் தலைமையில் மின்ஹாஜ் மகா விததியாலய (தேசிய பாடசாலை)அதிபர் கே.எல்.
உபைதுல்லாஹ்வின் நெறிப்படுத்தலில் நேற்று(03)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சர்வதேச மராட்டி கலை சம்மேளன இலங்கை கிளை செயலாளர் எம்.கே.இப்னு அஸார்,கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முகம்மது இக்பால்,
றைஸ்டார் கழகத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான எஸ்.எல்.றஹ்மத்துல்லாஹ் மற்றும் கழகத்தின் செயலாளர் ஏ.றிஸ்மி உபதலைவர் எம்.டி. எம்.பாஜில்,செயலாளர் ஆர்.சாமில்,எம்.சாஜின் பயிற்றுவிப்பாளர் உப செயலாளர் எம்.ஏ.சிபான் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours