(  வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை வலய இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர் கனகரட்ணம் ரெத்தினேஸ்வரன் தனது  32 வருட கல்விச் சேவையை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுள்ளார்.

 வீரமுனையைச் சேர்ந்த கனகரட்ணம் பூமணி தம்பதிகளின் புதல்வரான ரெத்தினேஸ்வரன் 1990 ஆம் ஆண்டு ஆசிரியராக மல்வத்தை விபுலானந்தா மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையேற்றார்.

  தொடர்ந்து வீரமுனை இகிமி மகா வித்தியாலயம் மற்றும் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார்.

பின்னர்  2009 இல் இருந்து  சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் இந்து சமயபாட ஆசிரிய ஆலோசகராக கடமை ஆற்றி வந்தார்.
ஓய்வு பெற்ற அவர் சிறந்த சமூக சேவையாளரும் நொத்தாரிசுமாவார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours