ஒரு கிலோ நெல்லை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி
, ,
ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக தலா 100 ரூபா என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பரந்தன் வயல்வெளியில் இன்று இடம்பெற்ற வடக்கு நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசாங்கம் துரிதமாக வழங்கியது. எனவே, இம்முறை பெரும் போகத்தில் மேலதிக நெல் அறுவடை கிடைக்கும் என நம்புகிறோம்.அதற்கமைய ஒரு கிலோ நெல்லை 100 ரூபா உத்தரவாத விலைக்கு அரசாங்கத்தின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours