(ஷமி மண்டூர்)
மட்டக்களப்பு
மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை மீனாட்சி
குளத்தில் நீரில் மூழ்கி நால்வர் பலியான சம்பவம் இன்று மாலை
இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான
வீதி களுமுந்தன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியரான
கோணேஸ்வரன் கிபேதன் (27) மற்றும் மாணவர்களான சத்தியசீலன் டனுஜன் (16),
வீரசிங்கம் விதுஜன் (16), தயாபரன் ரஜீர்தரன் (16) என்பவர்களே இவ்வாறு
நீரிரி மூழ்கி சடலமாக மீட்கப்பட்டவராவார்கள்.
குறித்த
மாணவர்கள் அனைவரும் களுமுந்தன்வெளி பாடசாலையில் கா.பொ.த.சாஃதர வகுப்பில்
கல்வி கற்று வருவதாகவும் இன்று விடுமறை தினமானதால பதினொரு மாணவர்களும்
மூன்று ஆசிரியர்களும் மீனாட்சியர் குளத்தினை பார்ப்பதற்கு சென்று அங்கு
சமைத்து உணவருந்தி பின்னர் சமையல் பாத்திரங்களை குளக்கரையில் சுத்தம்
செய்து கொண்டிருந்த வேளை மூன்று மாணவர்கள் அருகில் இருந்த வள்ளத்தில் ஏறி
குளத்தினுள் சென்ற போது வள்ளத்தினுள் அதிகமான நீர் உட்புகுந்ததினால் வள்ளம்
நீரில் மூழ்கியதனை அவதானித்த ஆசிரியர் மாணவர்களை காப்பாற்ர சென்றபோது
நால்வரும் நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்
போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு
நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ
இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி
தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத
பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.;
கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Post A Comment:
0 comments so far,add yours