(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இலங்கை
சனநாயக சோசலிசக் குடியரசின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு
"உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்" எனும் தொனிப்பொருளில் "குருதிக்கொடை
வழங்கல்" முகாம் நேற்று (06) மட்டக்களப்பு, போரதீவு பற்று வெல்லாவெளி
பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்
செல்வி. ஆர். ராகுலநாயகி அம்மணியின் வழிகாட்டலில் சமூக வலுவூட்டல்
அபிவிருத்தி நிறுவனத்தின் (ORCED) அனுசரணையில் இந்நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் டி.
துலாஞ்சனன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சசிகுமார், மட்டக்களப்பு
பிராந்திய இரத்த வங்கி வைத்திய அதிகாரி திருமதி. கீர்த்திகா மதனழகன், இரத்த
வங்கி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், பாலையடிவட்டை இராணுவ முகாமைச்
சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை
குறிப்பிடத்தக்கது.

.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours