இ.சுதாகரன்

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த இலங்கைக் குடியரசின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு    

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த இலங்கைக் குடியரசின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு  வலயக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.சிறிதரன் அவர்களின் தலைமையில் சனிக்கிழமை காலை வலயக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான சுதந்திர தின நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்.திருமதி தனுசியா ராஜசேகர்,திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜெயந்திமாலா மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கணக்காளர்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பயன்தரும் மரக்கன்றுகள் அலுவலக வளாகத்தில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours