( வி.ரி. சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட  மத்திய முகாம் முஸ்லிம் அரசினர் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற செல்வி ஏ.எம்.பாத்திமா றிஹா  இன்று(3) வெள்ளிக்கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

பாடசாலை அதிபர் வைபிஏ. சுல்தான் தலைமையில் நடைபெற்ற விழாவில்  பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.


 கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் ஏ அப்துல் மஜீத் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன்  உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரிய ஆலோசகர் எஸ். அற்புதராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தரம் 5 கற்பித்த ஆசிரியர் எஸ்.பரம்சோதி பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஏனைய மாணவர்களும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours