வசிகரன் ஊடகப்பிரிவு

தமிழ்மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கு ஒரேயொரு கட்சியாக இன்று ஜனநாயகவழியில் உரிமைப்போராட்டத்தினை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்ற கட்சியே தமிழரசுக்கட்சியாகும் இக்கட்சியினை ஆதரிக்கவேண்டியது தமிழ்மக்களின் தார்மீகக்கடமையாகும் என மண்முனைத்தென் எருவில்பற்று பிரதேசசபையின் எருவில் வட்டார வேட்பாளர் தமிழரசுக்கட்சியின் வட்டாரப் பிரதித் தலைவர்  அ.வசிகரன் தெரிவித்தார்

எருவில் கிழக்கு மக்களுடனான சந்திப்பு வியாழக்கிழமை மாலை இடம்பெற்றபோது  அங்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்


அவர் மேலும் பேசுகையில் இப்பிரதேசத்தில் பல பேரினவாதக் கட்சிகள் உட்புகுந்து தேர்தல் வேட்டைக்காக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர் இவர்களால் எதுவும் ஆகப்போவதில்லை எங்களது வாக்குகளை சிதரடிப்பதற்காகத் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளனர் என்ற விடயம் எமது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் எதிர்வரும் 9 ஆம் திகதி அவர்களுக்குச் சிறந்த பாடம் புகட்டுவதுடன் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றியடையச்செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

தமிழரசுக்கட்சிக்காக  எமது தலைமை மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஐயா ஆகியோர் சிறந்த வழிகாட்டல்களை வழங்கிக்கொண்டிருப்பது  தமிழர்களின் உரிமைக்காகவே என்பதனை மறக்கமுடியாது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours