உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிளை அலுவலகம் பெரிய கல்லாற்றில் திறந்து வைப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிளை அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு பெரிய கல்லாாறு வட்டார வேட்பாளர் சிவகுரு கணேசலிங்கம் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாகவும் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் எஸ்.அருள் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours