(கனகராசா சரவணன்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று நள்ளிரவு (1) இனம்தெரியாதேரினால் பெற்றோல் குண்டு தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முகமது செய்யது முகம்மது சவானா என்பவர் பெண் மகன் இந்த பிரதேசத்தில் போதைப் பொருள் ஒழிக்க வேண்டும் என அவரின் நண்பர்களுடன் இணைந்து போதை பொருள் வியாபரிகள் தொடர்பாக பொலிசாருக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார்

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று குறிதத்த வீட்டின் உரிமையாளரும் அவரது தாயாரும் மாக இரு பெண்கள் நித்திரைக்கு சென்ற நிலையில் 12 மணியளவில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுதாக்குதல் மேற்கொண்டதையடுத்து வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் எதுவிதமான காயம் ஏற்படவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மற்றும் தடவியல் பிரிவு பொலிசார் மேப்ப நாய் சகிதம்; சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருதாக பொலிசார் தெரிவித்தனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours