(சுமன்)
ஏனைய
கட்சிகளை ஏளனம் செய்து விமர்சனம் செய்வது தந்தை செல்வா வகுத்த கொள்கைக்கு
முறனானது. நாங்கள் வேறுவேறாக இருந்ததாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
என்ற பிணைப்பு எங்களுக்குள் இருக்கின்றது என்ற அடிப்படையிலே இந்தத் தேர்தலை
முகங்கொடுத்து தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எல்லாக் கட்சிகளும் ஒன்றாக
இருக்கின்றன என்ற விடயம் தென்னகத்திற்குச் சொல்லப்பட வேண்டும் என இலங்கைத்
தமிழ் அரசக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்
தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள், எங்களுடைய
தோழமைக் கட்சிகளுக்கும் வாக்களியுங்கள். எல்லோரையும் வெல்ல வைத்து
தமிழர்களின் பலத்தைக்காடடங்கள். அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை
நிராகரியுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டு ஊடக
அமையத்தில் இடம்பெற்ற ஊடடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2018ம்; அண்டு
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உள்ளுராட்சித் தேர்தல் கலப்பு முறைத்
தேர்தலாகும். இதன் போது கடந்த 2018ல் தேர்தலுக்கு முன்னர் எமது தலைவர் மாவை
சேனாதிராஜா தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது
வட்டாரத் தேர்தல் என்பாதல் கட்சிகளைத் தாண்டி வட்டாரத்தின் பிரசித்தமும்
செல்வாக்குச் செலத்தும் என்ற காரணத்தினால் நாங்கள் மூன்று கட்சிகளும்
ஒவ்வொரு வட்டாரத்திலும் செல்வாக்குள்ளவர்களை நிறுத்தி அதிக வாக்குகளைப்
பெறலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டு அனைவரும் தோழமைக் கட்சிகளும்
ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் மற்றமொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில்
இடம்பெற்ற போது ஏனைய தோழமைக் கட்சிகளின் தலைமைகள் உறுப்பினர்களும் அங்கு
வந்திருந்தாகள். நாங்கள் முன்வைத்த பொது வேட்பாளர் விடயம் பொருத்தமானதில்லை
என்றும் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவம் உள்ளதென்றும் ஒவ்வொரு
கட்சிகளுக்கும் சபைகளைப் பிரித்தொதுக்கி இந்தத் தேர்தலை முகங்கொள்ள
வேண்டும் என்று வேட்பாளர் பங்கீடு தொடர்பில் முன்மொழியப்பட்டது. அது
தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினராகிய நாங்கள் ஏற்றக்
கொள்ளவில்லை. நாங்கள் பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியிலேயே
வேட்பாளர்களை நிறுத்தவோம், பொதுவாக வேலை செய்வோம், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் சபைகளாக இவற்றை இயங்கச் செய்வோம் என்ற தீர்மானத்திலேயே
இருந்தோம்.
அதற்குப் பின்னர் இந்தக் கலப்பு முறைத் தேர்தலை
முகங்கொடுப்பதற்கு வட்டார விகிதாசார விடயங்களை யோசிக்க வேண்டும் என்ற ஒரு
யோசனை எனது அலுவலக ரீதியில் முன்வைக்கப்பட்டது. அந்த யோசனை தொடர்பில்
எமக்கு புது உற்சாகம் பிறந்தது. மூன்று கட்சிகளும் முன்று சின்னங்களிலும்
முன்நிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்;கான வாக்குகளைச் சேகரிக்கலாம்
என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் கொழும்பில் சம்பந்தன்
ஐயாவிடம் விளக்கிச் சொன்னோம். அவர்கள் அதனை விளங்கிக் கொண்டார்கள்.
ஆனாலும்
எமது கட்சியின் ஒற்றுமை தொடர்பில் ஐயாவினால் குறிப்பிட்டுச்
சொல்லப்பட்டது. தனித்தனியாகக் கேட்பதையும் பிரிந்துவிட்டதாகவே மக்கள்
கருதுவார்கள் தற்போதைக்கு இந்த யோசனை வேண்டாம் என்று தெரிவித்தார். இதே
வேளை யாழ்ப்பாணக் கூட்டம் முடிவுற்றதன் பின்னர் அதில் அதிருப்தி அடைந்த
எங்கள் தோழமைக் கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மற்றும்
ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரைச் சந்தித்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில்
வேறாகக் கேட்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகச் செய்திகள் வந்தன. அதனைத்
தொடர்ந்து சம்பந்தன் ஐயா அவர்களைச் சமாதானப்படுத்தியுள்ளார் என்ற
செய்தியும் வந்தது.
இந்தப் பின்னணிக்கு அப்பால் ஒற்றுமை காரணமாக
பங்காளிக் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்குவது தொடர்பில் தீர்மானம்
எடுக்கப்பட்டு சபைகள் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஒற்றுமை காரணமான பல
விட்டுக் கொடுப்;பின் அடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
செயற்பட்டது.
இதனடிப்படையில் வேட்பாளர்கள் நியமிக்கும் போது
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் எமது தோழமைக் கட்சிகளால்
நியமிக்கப்பட வேண்டிய நிலை இருந்தது. ஆனாலும் எமது உறுப்பினர்கள் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு என்ற ரீPதியில் சகித்துக் கொள்ள வேண்டும் என்று
கேட்டுக் கொண்டதற்கமைவாக வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். வேட்பாளர்
அறிமுகக் கூட்டங்களிலும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற
நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தோம்.
தேர்தல் முடிவடைந்து
சபைகள் அமைக்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில்
அனைவரும் இணைந்து சபைகளை அமைத்தோம். இந்தக் கலப்பு தேர்தல் முறைiமையினால்
சபைகளை அமைக்கும் போது பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தோம. இந்தத் தேர்தல்
முறை தொடர்பில் நாங்கள் ஏற்கனவே ஊகித்த விடயங்களும் நடைபெற்ற விடயங்களும்
ஒன்றாக இருந்தன. அப்போது நல்லாட்சி அரசாங்கம் இருந்ததன் காரணமாக தேசியக்
கட்சிகள் மற்றும் பல சுயேட்சைக் குழுக்களும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் சபைகளாக அறுதிப் பெரும்பான்மையுடன் அமைத்தோம்.
இதே
வேளை உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர் தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சி
தொடர்பில் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இதனை ஆராய்வதற்கு
ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. இதன்போது தனித்தனியாகப்
போட்டியிட்டிருந்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என்ற விடயமே
அனைவராலும் முன்வைக்கப்பட்டது.
அதன் பின்னர் சபைகளிலே ஒவ்வொரு
பாதீடுகளை நிறைவேற்றுகின்ற போதெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பல
சோதனைகளை அனுபவித்தது. அதனை ஒவ்வொரு விதமாக அணுகி பாதீடுகளை
நிறைவேற்றியிருந்தோம். இவ்வாறான நிலமைகள் சென்று கொண்டிருக்கையில் எமது
தோழமைக் கட்சிகள் பங்கீட்டின் அடிப்படையில் பெற்றுக் கொண்ட சபைகளை தங்களது
சபைகள் என்ற ரீதியில் உச்;சரிக்கத் தொடங்கி விட்டார்கள். இவ்வாறான
கருத்துகள் மிகவும் அசௌகரியமானதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து
2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசக் கட்சி பாரிய
பின்னடைவைச் சந்தித்திருந்தது. இது தொடர்பில் சுமந்திரன் அவர்கள் ஒவ்வொரு
மாவட்டத்திற்கும் சென்று கலந்துரையாடினார். இதன்போதும் உள்ளுராட்சி மன்ற
நிலைமைகளையே மீண்டும் சொல்லியிருந்தார்கள்.
அதன் பின்னர்
முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சுமந்திரன் உள்ளுராட்சி
மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியகக் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியக்
களமிறங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது தொடர்பில் அவருக்கெதிராக
சுமந்திரன் பிரிக்கப்பார்க்கின்றார் என்ற பல விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டது. அது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்றெல்லாம்
சொல்லப்ட்டது. ஆனால், இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து அல்ல என்ற விடயம்
மேலே கூறப்பட்ட விடயங்களில் இருந்து புரியும்.
தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பின் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்ற ரீதியில்
அனைவருக்கும் அக்கறை இருந்தது. அண்மையில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்
போது நானும் கொழும்பிற்குச் சென்ற வேளை எங்களுக்குள் இருக்கும்
குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். அதற்கு
சித்தார்த்தன் அவர்கள் சாதகமான பதிலைத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே விமர்சனம் செய்வதை
நிறுத்துவதற்கான நிலைமையொன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை
முன்வைத்தேன். அதற்கான சந்தர்ப்பம் வாய்ப்பதற்கு முன்பு தற்போதைய
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது.
அதன் பின்னர்
இறுதியாக மட்டக்களப்பில் இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்திலே
பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்களிலே 4 பேரைத் தவிர மற்றைய எல்லோரும்
இலங்கைத் தமிழ் அரசக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும், மற்றைய
கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட வேண்டும் என்ற விடயங்கள் அங்கு
வலியுறுத்தப்பட்டது. அந்த விடயங்கள் தோழமைக் கட்சிகளுக்குச் சொல்லப்பட
வேண்டும். மூன்று கட்சிகளும் மூன்று சின்னங்களிலே போட்டியிட வேண்டும்.
மூன்று கட்சிகளும் ஒன்றாகச் சென்று தேர்தல் பரப்புரைகளைச் செய்ய வேண்டும்.
இதன் போது மூன்று கட்சிகளும் மூன்று சின்னங்களில் கேட்கின்றோம் விரும்பிய
சின்னங்களில் ஒன்றுக்கு வாக்களியுங்கள் என்ற வகையிலே நாங்கள் பிரச்சாரம்
செய்ய வேண்டும் என்ற ரீதயில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால்
எங்கள் தீர்மானங்கள் தொடர்பில் கட்சித் தலைவர்களிடையே கலந்துரையாடல்
இடம்பெற்றதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னமே மூன்று
கட்சிகளும் பிரிந்து விட்டன என்றும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
என்ற கதைகள் அடிபட்டது வேதனையான விடயம். பிள்ளையார் பிடிக்கப் போய்
குரங்காக மாறிவிட்டது என்ற அதிருப்தி கட்சியிலே பற்றுக் கொண்ட பலருக்கு
இருக்கின்றது.
குரங்காக மாறியதை மீண்டும் உருட்டி எடுத்து
பிள்ளையாராக ஆக்கிவிட முடியும். இந்தத் தேர்தல் முடிந்ததன் பிறகு
இருந்தபடியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வர வேண்டும் என்று
நாங்கள் நினைக்கின்றோம். ஏனெனில் தேர்தல் முடிந்த பின்னர் சபைகள்
அமைக்கின்ற போது நிச்சயமாக ஒருவரின் உதவி மற்றையவருக்குத் தேவைப்படும்.
அந்த நேரத்திலே தற்போதுள்ள நிலைமைகளை மறந்து நாங்கள் ஒன்றாகச் சேரும்
வாய்ப்பு இருக்கின்றது. எங்களுடன் இயங்கிக் கொண்டிருந்த ஜனநாயகப்
போராளிகளும் இந்த ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பிலே சேர்ந்து விட்டார்கள்
என்ற செய்தி கவளையளிக்கின்றது.
தமிழ்த் தேசியக் கொள்கையை
முன்னெடுக்கின்ற கட்சிககள் வெறுமனே அரசியற் கட்சிகள் அல்ல. அவை விடுதலை
இயக்கங்கள். விடுதலை இயக்கத்தின் ஒரு பணியாகவே அரசியல் நடைபெறுகின்றது.
எனவே இந்த விடுதலையை முற்கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் நாங்கள்
நிச்சயமாக ஒற்றமையாக இருக்க வேண்டும்.
ஒற்றுமை என்பதில் பல
பிரச்சனைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் வெவ்வேறு
அணுகுமுறைகளில் செயற்பட்டவர்களிடையே ஒற்றுமை என்பது கடினமான விடயம் தான்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அகிம்சை வழியிலே இருந்தது. ஏனைய
கட்சிகளெல்லாம் மறவழிகளில் போராடியவர்கள். அவர்கள் செய்த வீரதீரச்
செயல்களையெல்லாம் யாரும் மறுக்க முடியாது. எனவே அவர்கள் தொடர்பான
விடயங்களைச் சொல்லி அவர்களை ஏளனம் செய்து விமர்சனம் செய்வது தந்தை செல்வா
வகுத்த கொள்கைக்கு முறனானது. எனவே இதில் யாராக இருந்தாலும் ஏனைய கட்சிகளை
விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. விமர்சிக்கவும் கூடாது இதுவரை
செய்திருந்தால் அவற்றை நிறுத்திவிட வேண்டும். நாங்கள் வேறுவேறாக
இருந்ததாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பிணைப்பு எங்களுக்குள்
இருக்கின்றது என்ற அடிப்படையிலே இந்தத் தேர்தலை முகங்கொடுக்க வேண்டும்.
இங்கிருக்கின்ற
தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எல்லாக் கட்சிகளும் ஒன்றாக இருக்கின்றன
என்ற விடயம் தென்னகத்திற்குச் சொல்லப்பட வேண்டும். அந்த அடிப்படையில்
அடுத்த கட்டத்தை அரசாங்கத்தோடு தீர்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்க
வேண்டும். அதற்கான பலத்தை அனைவரும் காட்ட வேண்டும்.
நான் தமிழரசுக்
கட்சியைச் சேர்ந்தவன் என்பதால் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு
மக்களைக் கேட்கின்றேன். எங்களுடைய தோழமைக் கட்சிகளுக்கும் வாக்களியுங்கள்.
எல்லோரையும் வெல்ல வைத்து தமிழர்களின் பலத்தைக் காட்டுங்கள்.
அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை நிராகரியுங்கள் என்று
தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours