பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் வழி காட்டலின் கீழ் விளையாட்டு கழகங்கள் இணைந்து கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு சென்று குப்பை கூழங்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் போது சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் தேங்கி காணப்பட்ட திண்மக்கழிவுகள் மாநகர சபையின் உதவியுடன் அகற்றப்பட்டதுடன் நுளம்பு பரவலில் இனம் காணப்பட்ட பல பிரதேசங்களும் விளையாட்டுக்கழக வீரர்களால் சுத்தம் செய்யப்பட்டன.
இதன் போது நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் சைனிங் விளையாட்டு கழகம் உள்ளிட்ட அப்பகுத இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours