( வி.ரி. சகாதேவராஜா)
அரசாங்கத்தின்
புதிய திட்டமான சமூக நலன்புரி சேவை திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் உள்ள
பிரதேச செயலக பிரிவுகளில் நிகழ்நிலை( online) மூலம் பயனாளிகளின் தரவுகள்
சேமிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின்
கீழ் சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் தெரிவு
செய்யப்படும் பயனாளிகளுக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அந்த
அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் விண்ணப்பிக்கப்பட்ட 7430
பயனாளிகளுக்கான தரவுகளைப் பெறுவதற்கான online வேலைத்திட்டம் நேற்று(10)
வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
திருக்கோவில்
பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர்
கந்தவனம் சதிசேகரனின் தலைமையில் இந்த online நிகழ்ச்சி திட்டம்
காஞ்சிரங்குடா கிராமத்தில் நேற்று
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காஞ்சிரங்குடாவில் உள்ள 140 குடும்பங்களில் நேற்று 15 குடும்பங்கள் இந்த நிகழ்நிலை online தரவு சேகரிப்பிற்கு உள்ளானது.



.jpg)
Post A Comment:
0 comments so far,add yours