இ.சுதா
தேர்தல்கள் ஆணையகத்தில் இன்றைய தினம் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது ஜனநாயக உரிமையினை மக்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது கட்டாய தேவையாகவுள்ளது.அதன் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது உரிய காலத்தினுள் நடைபெற வேண்டும்.இங்கு கலந்து கொண்டிருக்கின்ற பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாடு இதுவேதான்.
தேர்தல் உரிய காலத்தில் நடாத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.அதன் அடிப்படையில் நிதி தொடர்பாக எழும் பிரச்சினைக்கு அரசுடன் கலந்துரையாடி உரிய தீர்வினைப் பெற்றுத் தேர்தல் நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும்.மாறாக தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு அடிக்கப்படுகின்ற சாவு மணியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தலைமையில் தேர்தல் ஆணையகத்தில் இடம்பெற்ற கட்சி செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Post A Comment:
0 comments so far,add yours