இ.சுதா
இவ்வாறு பட்டிருப்பு எருவில் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே முன்னாள் பிரதியமைச்சரும் ,தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு மாவட்டத் தலைவருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது எதிர் காலத்தில் ஆட்சி அமைக்க இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது பலமான எதிர்க்கட்சி மாத்திரமல்லாது குறுகிய காலத்தினுள் பாரிய வளர்ச்சிப் போக்கினை அடைந்த கட்சியாகும்.55 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதனை யாரும் மறைத்து விடமுடியாது.
இனவாதம் இல்லாத தலைவர் கெளரவ எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் சொன்னதை நிறைவேற்றும் தார்மீகப் பொறுப்புடையவர்.ஆட்சி அதிகாரங்களை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பேற்கும் சூழ் நிலையில் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரம் வழங்கப்படுவது மாத்திரமல்லாது பொருட்களின் ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டு மக்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.நாட்டில் தற்போது பேசு பொருளாக பேசப்படுகின்ற எரிபொருள் விலையேற்றத்திற்கு தீர்வு காணப்படும்.இவற்றுக்கு மக்கள் தமது பலத்தினை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்க வேண்டும்.
வெறுமனே பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக இருந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாத பல மில்லியன் கணக்கான பணத்தினை அரசாங்கத்தினூடாகப் பெற்று மட்டு மாவட்டத்தில் பல அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றேன்.இதில் களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் 300 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கின்றது.அது மாத்திரமல்லாது கம்பரெலியத் திட்டத்தின் கீழ் பல வீதிகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன.எதிர் காலத்தில் பல அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சித்தமாக இருக்கின்றேன்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலமாக தெரிவாகின்ற உறுப்பினர்கள் தமது கிராமத்தினுடைய தேவையினை சபையினூடாக நிறைவேற்ற முடியும்.கடந்த காலங்களில் எருவில் வட்டாரத்தினை பிரதி நிதித்துத்திய உறுப்பினர் பல அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றார்.அதற்கான வழி வகையினை செய்து கொடுத்திருக்கின்றேன்.எதிர் காலத்திலும் உள்ளுராட்சி சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் பலம் ஓங்கி ஒலிக்க மக்கள் தமது வாக்கினை வழங்கி அபிவிருத்திப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனத் தெரிவித்தார்.


Post A Comment:
0 comments so far,add yours