சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தின் அதிபர் சீ.பாலசிங்கன் தனது 35 ஆவது கல்விச்சேவையில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார்.
இவர் துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் நாவிதன்வெளியினை வதிவிடமாகவும் கொண்ட இவர் ஒரு சிறந்த தரம் 1 அதிபராக அனைவரிடமும் நன்மதிப்பினைப் பெற்றுவிளங்கியவர்.
இவர் தனது ஆரம்பக் கல்வியினை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கற்று இடைநிலையினைக் கல்வியினை துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தினை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கணிதப்பிரிவில் கல்விகற்றுள்ளார்.கணிதப்பாட ஆசிரியராக 1988.08.07 ஆம் திகதி அன்று முதல் நியமனத்தினை றாணமடு இந்துமகாவித்தியாலயத்தில் நியமனம் பெற்று பின்னர் 1997 ஆம் ஆண்டு வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்திற்கு ஆசிரியராக இடமாற்றம் பெற்றதுடன் அதிபர் சேவைப் பரீட்சையில் சித்திபெற்று வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் அதிக காலம் அதிபராகச் சேவையாற்றியதுடன் வேப்பையடியின் கல்விவளர்ச்சிக்கு வித்திட்ட பெரு மகன் என்ற நாமத்தினையும் சூடிய ஒருவராக இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்திற்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் இன்று தனது கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளார்.
இவர் கல்விமானிப்பட்டத்தினை பெற்று இருப்பதுடன் இவரது சிறந்த சேவையினை கௌரவிக்கும் முகமாக இருமுறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயர் கௌரவமாகிய குருபிரதீபா விருதினையும் பெற்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours