இ.சுதாகரன்


இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறை படுத்தப்படுகின்ற தூய்மையானதும் பசுமையானதுமான இலங்கை எனும் தொனிப்பொருளிற்கு அமைய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் சூழல் நேய செயற்பாடுகள்  இன்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக  மண்ணில் ஆரம்பமானது         களுவாஞ்சிக்குடி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.சபியதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின்  பிரதேச செயலாளர்  திருமதி. சிவப்பிரியா வில்வரெத்னம் அவர்கள் கலந்து கொண்டார்

இந்த நிகழ்வில் அதிதிகளாக களுதாவளை  பிரதேச சபை செயலாளர் ச.அறிவளகன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகெளரி தரணிதரன், உதவி பொலிஸ் அத்தியட்சகர்A.S.P ஜனக்க ஜயரத்தின,T.அபேயவிக்கிரம, மாகாண பணிப்பாளர் M.B சரத் சந்திரபால, திருமதி.கலாராணி ஜெசுதாசன் , மாகாண நிருவாக உத்தியோகத்தர் தியாகராசா, தேசிய சம்மேளன பிரதிநிதி க.தனுசன், மாவட்ட சம்மேளன தலைவர் கி.யுவப்பிரகாஸ்  சமூர்த்தி தலைமை முகாமையாளர், மாங்காடு, எருவில், கல்லாறு முகாமையாளர்கள்,  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன்  இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாகிகள், களுவாஞ்சிக்குடி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், தையல் பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூர்த்தி பயனாளிகள் , பிரதேச இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours