தமிழரசுக்கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் ஆலையடிவேம்பில்..
(வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை
தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்
நேற்று முன்தினம் (5) ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பில் நடைபெற்றது.
அம்பாறை
மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில்
ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்றது.
அங்கு இலங்கை தமிழரசுக் கட்சியின்
தலைவர்
மாவை சேனாதிராஜா கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான எம்ஏ. சுமந்திரன் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி அம்பாறை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.



Post A Comment:
0 comments so far,add yours