(வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கிலங்கையின் முதலாவது உளுந்து தோல் நீக்கும் இயந்திரம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தங்கவேலாயுதபுரத்தில்
அம்பாறை அரச அதிபர் டக்ளஸினால் திறந்து வைக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் அயராத முயற்சியால் இவ் இயந்திரம் பல லட்ச ரூபாய் செலவில் பெறப்பட்டுள்ளது.
இவ் இயந்திரம் கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் மட்டுமே உள்ளது .
பிரதேச
செயலாளர் அவர்களின் நெறிப்படுத்திலின் ஊடாக திட்டமிடல் பிரிவின் கீழ்
சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ் இயந்திரம் பெறப்பட்டுள்ளது.
இவ் வேலை திட்டத்தினை கடந்த செவ்வாய்க்கிழமை(31) அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் வைபவ ரீதியாக ஆரம்பித்தது வைத்தார்.






Post A Comment:
0 comments so far,add yours