( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவின்
தென் கோடியில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டிருக்கின்ற ஆதி சிவன்
ஆலயத்தின் வருடாந்த மகா சிவராத்திரி விழா, இம்முறை ஆலயத்தலைவர்
த.செல்லத்துரை தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
நேற்று
(18) சனிக்கிழமை மாலை வழமை போல,சமுத்திரத்தில் கடல் நீர் எடுத்து தேரோடும்
வீதிவழியாக பவனி வந்து, ஆதி சிவன் ஆலயத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு
அபிஷேகம் செய்யப்பட்டது .
ஆலய பரிபாலன சபை தலைவர் த. செல்லதுரை தலைமையிலான குழுவினர் இந்த அபிசேகத்தில் பங்கு பற்றினர் .
பின்னர், அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று சிவலிங்கத்திற்கு குடம் குடமாக நீர் சொரிந்து அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து விடிய விடிய ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுடன் நான்கு சாம பூஜைகளும் இடம் பெற்றன.





Post A Comment:
0 comments so far,add yours