அம்பாறை மாவட்டத்தில் இன வன்செயல்களால் பாதிப்புகளை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ் கிராமங்களை நோக்கிய பயணத்தை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசம் சிவராத்திரி தினமான சனிக்கிழமை ஆரம்பித்தது.
சம்மாந்துறை
பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பழவெளி கிராமத்துக்கு தலைவர் எஸ்
லோகநாதன் தலைமையில் சமாசத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும்
உத்தியோகத்தர்கள் கள விஜயம் மேற்கொண்டனர்.
புலம்பெயர்
தமிழ் செயற்பாட்டாளர்களின் நிதி பங்களிப்புடன் இக்கிராம மக்களின்
வாழ்வாதாரத்தை கூட்டுறவு துறை மூலமாக முன்னேற்றுவதை நோக்கமாக கொண்டு சிவன்
சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி நிர்வாகத்தை தெரிவு செய்தனர்.
இது
போன்ற தமிழ் கிராமங்களை அடையாளம் கண்டு, அங்கு உள்ள மக்களின்
வாழ்வாதாரத்தை புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் மூலம் முன்னேற்றுவதை
அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசம் இவ்வாண்டுக்கான
பிரதானமான வேலை திட்டமாக தீர்மானித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours