(கனகராசா சரவணன் )


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பகுதியில் ஒய்வு பெற்ற இராணுவமேஜர் வீட்டில் 7 இலச்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற திருடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை (18) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த பிரதேசத்திலுள்ள ஒய்வு பெற்ற இராணுவ மேஜர் வீட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ம் திகதி வீடடில் அனைவரும் இருந்துள்ள நிலையில் அங்கு வந்து சென்ற நபர் அங்கிருந்து  தங்கசங்கலி காப்பு, தோடு என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்பiடையில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிசார் திருடனை நேற்று கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை திருடன் நீர் கொழும்பில் உள்ள அடைவ கடைகளில் அடைவ வைத்து 5 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை பெற்றுள்ளதாகவும் அவற்றை கைப்பற்றுவதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேவதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours