(சுமன்)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் இன்று (18) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த அமைதியான இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், சமய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஒத்துழைக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றினை மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமிடம் ஊடகவியலாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours