(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நுளம்பு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாவை அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் மாவட்டத்தில் நேற்று மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய்தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாரார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குனசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

ஏறாவூர் ஜயங்கேணி பாரதிகிராமத்தைச் சோந்த 22 வயதுடைய பகுpரதன் தனுஷ;கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் டெங்கு நுளம்பு தாக்கத்துக்கு உள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 16ம திகதி மட்டு போதனா வைத்தியசாலைதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தற்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் காரணத்தால் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதுடன் நேற்று வெள்ளிக்கிழமை மட்டு டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தினால் களுவாஞ்சிக்குடியில் 2 பேரும், காத்தான்குடியில் ஒருவரும், செங்கலடியில் 2 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும் ,கோறளைப்பற்று மத்தியில் 4 பேரும் மட்டக்களப்பில் 4 பேர் உட்பட 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

எனவே பொதுமக்கள் வீட்டில் ஒரு நுளம்பைக் கண்டாலும் சுற்றுப்புறச்சூழலை துப்பரவு செய்யுங்கள், காய்ச்சல் ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று உடனடியாகவே மருத்துவ ஆலோசனையை பெறுங்கள்., காய்ச்சல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் இரத்தப்பரிசோதனை செய்யுங்கள், காய்ச்சலுக்கு பரசிட்டமோலை தவிர வேறு மருந்துளை ஒருபோதும் பாவியாதீர்கள்.

ஆகவே 'ஒரு நுளம்பு உன்னை நாளை கொல்லும் நீ அதை இன்றே கொல்லாவிடில்' என்பதனை மனதில் நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் தமது சுற்று சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன்  டெங்கு நுளம்பு தொடர்பாக எச்சரிக்கையுடன் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours