(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை "யங் பேர்ட்ஸ்" விளையாட்டு கழகத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மிக நீண்ட கால தேவையாக இருந்த 
கல்முனைக்கான  ஜனாஸா பிரிவு "யங் பேர்ட்ஸ்"  விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.முஹம்மது மர்சூக் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆரம்ப அங்குரார்பண நிகழ்வு (11) சனிக்கிழமை கல்முனை கடற்கரை வீதி, மீனவர் சங்க காரியாலயத்திற்கு அருகாமையில் கழகத்தின் உப தலைவர் எஸ்.அஷ்ரப்கான் மற்றும் செயலாளர் எம்.வை.பாயிஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில்
இடம்பெற்றது.

ஜனாஸா நலன்புரி சேவைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விளையாட்டு கழகத்தின்  உறுப்பினர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் முன் வந்து தந்து உதவியுள்ளனர். 

கல்முனை பிரதேசத்தில் மிக நீண்ட கால தேவையாக இருந்த கல்முனைக்கான ஜனாஸா நலன்புரி சேவைகள் "யங் பேர்ட்ஸ்" விளையாட்டு கழகத்தின் ஜனாஸா பிரிவின் மூலமாக  நிறைவேற்றப் பட்டுள்ளதுடன் தொடர்ந்து இச் சேவையை கழகத்தின் ஜனாஸா பிரிவு முன்கொண்டு செல்லும் என்பதை கல்முனை பிரதேச வாழ் மக்களுக்கு கல்முனை "யங் பேட்ர்ஸ்" விளையாட்டு கழகத்தின் ஜனாஸா பிரிவு தெரிவித்துள்ளது.

உலமாக்களான மருதமுனை, தாறுள் ஹுதா பெண்கள் அரபு கலாசாலையின் பணிப்பாளர், கலாநிதி அஷ்-ஷெய்க் எம்.எல்.முபாரக் (மதனி), ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியின் அதிபர், மெளலவி பி.எம்.ஏ.ஜெலீல் (பாக்கவி), மெளலவி அல்- ஹாபிழ் எம்.சி.எம்.உவைஸ் 
(தப்லீஹி) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வின்போது, ஜனாஸா பிரிவுக்கு உதவி வழங்கிய அனைத்து  நபர்களினாலும் அப்பொருட்கள் உத்தியோகபூர்வமாக  விளையாட்டு கழக ஜனாஸா பிரிவினரிடம்  வழங்கி வைக்கப்பட்டது. 

இங்கு கலந்து கொண்ட அதிதிகள் உரையாற்றும் போது, ஜனாஸாவுக்கான கடமைகளைச் செய்வது இஸ்லாமிய அடிப்படையில்  மிக முக்கியமான பணியாகும். இந்த பணியினை ஏற்பாடு செய்து வழிநடாத்த திட்டமிட்டுள்ள கல்முனை "யங் பேர்ட்ஸ்"  விளையாட்டுகத்தின் ஜனாஸா பிரிவுக்கு நன்றிகளை கூறுவதோடு, கல்முனை பிரதேச வாழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் 
இவர்களுக்கு பக்கபலமாக என்றும்
இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் பொருளாதாரம் மற்றும் உடல் உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்விழாவின் ஏற்பாடுகளுக்கு உதவிய கழக உறுப்பினர்கள் மற்றும் ஜனாஸா பிரிவு அங்கத்தவர்கள், அது போல், பொருளாதார உதவிகளை வழங்கிய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது நலன் விரும்பி களுக்கும் கழகத்தின் ஜனாஸா பிரிவினர் மார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours