கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் கெ.ஜகன்நாத்  தலைமையில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது..

அரச உத்தியோகத்தர்களில் ஆளுமை மற்றும்  மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின்  அலுவலக  கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாக அமைந்திருந்தது.

அரச உத்தியோத்தர்களுக்கான 150 மணித்தியாலம் 19 நாள் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் நிகழ்வு இன்றைய தினம் (28)  இருதயநாதர் தேவாலயப் மண்டபத்தில் இடம்பெற்றது.

அதிதிகளுக்கு சிங்கள கலாசார  பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால்  கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு  கமநல அபிவிருத்தி  திணைக்களத்தில்  கணக்காளர்  எஸ்.தயானி அவர்களினால்  மொழிப் பிரயோகததின் அவசியம் மற்றும் தாற்பரியம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

தேசிய  மொழிக்கல்வி  மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில்  அரச திணைக்களத்தில் கடமையாற்றும்   65 உத்தியோகத்தர்கள் கற்கைநெறியினை  பூர்த்தி செய்தனர்.

இந்  நிகழ்வில்  கமநல அபிவிருத்தி  திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட  பிரதி ஆணையாளர் கெ.ஜகன்நாத் , கமநல அபிவிருத்தி  திணைக்களத்தின் கணக்காளர் எஸ்.தயானி அவர்களும் , மட்டக்களப்பு கமநல திணைக்களத்தின் கமநல  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  -தர்ஸ்குமார்  . இனோகா ,  மற்றும் வேழவேந்தன் அவர்களும்,மாவட்ட சிங்கள பாடநெறிக்கான இணைப்பாளர் வி.சந்திரகுமார்  , சிங்கள பாடநெறி வளவாளர்களாக எம்.கே.திலினி மதுசிகா  பி.ஜி.ஆர்.டி.சுதர்சிக்கா என பலர் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வானது மிக சிறப்பாக நடந்து முடிந்தது..






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours