இ.சுதாகரன்


பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை  வரவேற்கும் நிகழ்வு 

பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை  வரவேற்கும் நிகழ்வு வித்தியாலயத்தின் முதல்வர் சித்திரவேல் சசிதரன் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் அவர்களும் .விசேட அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.தயாளசீலன், கே.திருச்செல்வம் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்.பா.துஸ்யந்தன், அண்மைப் பாடசாலைகளின் அதிபர்கள்,ஆலயங்களின் தர்ம கர்த்தாக்கள் ,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் ,பழைய மாணவர் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தரம் ஒன்று மாணவர்கள் கழுத்துப்பட்டி அணிவித்துக் கெளரவிக்கப்பட்டதுடன் கடந்த 2018 முதல் 2022ஆண்டு வரையான காலப்பகுதியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மாலை அணிவித்தும் நினைவுச்சின்னம் வழங்கியும்  கெளரவிக்கப்பட்டதுடன்பாடசாலைசமூகத்தினரால் அதிதிகள் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours