எஸ்.சபேசன்
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் தேவஸ்தான மகாகும்பாபிஷேக பெருவிழா 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.இக்கும்பாபிஷேக பெருவிழாவின் கிரியைகள் 22 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றதுடன் வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு சார்த்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் விநாயகப்பெருமானுக்குச் சங்காபிஷேக நிகழ்வு சித்திரைமாதம் 5 ஆம்திகதி இடம்பெற இருக்கின்றது.
இக்கிரியைகள் யாவும் ஆலயக்குரு சிவசிறி இரத்
தினசபா சசி ஐயா அவர்களது ஒழுங்கமைப்பிலும் பிரதிஸ்டா பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் கலாபூசணம் சிவசிறி க.கு.மோகனாநந்த குருக்கள் அவர்களது தலைமையிலும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post A Comment:
0 comments so far,add yours