( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பு நேற்று கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது.
09
பாடசாலைகளைச் சேர்ந்த 202 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்
நிகழ்வு யாழ்ப்பாணம் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையின் பிரதான
மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு
கிளிநொச்சி வைத்திய சாலையின் உதவி மருத்துவர் டாக்டர்.த. ஜெகதீஸ்வரன்,
மருதங்கேனி கோட்டக் கல்விப் பணிப்பாளர் .செல்லத்துரை ஸ்ரீ இராமச்சந்திரன்,
பாடசாலையின் அதிபர்களான .சிவபாதம் ஜெயந்திரன், .சின்னத்தம்பி ரங்கனாதன்,
ஆசிரியர்களான திருமதி கணேஸ்வரன் சந்திரகலா, திருமதி. சி. சுகந்தி, திருமதி.
பகிஸ்வரன் சரிரா
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் கே.நவரத்தினம் ரூபரமேஷ்,
ஸ்ரீ கணேஷ் செலெக்க்ஷன் உரிமையாளர்,
கே.குகேந்திரன் மாரிமுத்து,
எஸ்.ரூபன் தருமலிங்கம்.
இவர்களின் தனிப்பட்ட நிதி பங்களிப்போடும்.
இதனுடன் இணைந்து
இணைந்த
கரங்கள் உறவுகளின் பங்களிப்போடும் இந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல்
உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்குவதற்கும் நிதிப் பங்களிப்பினை வழங்கி
இருந்தமை குறிப்பிடத்தக்கது.
யா/மருதங்கேணி இ.த.க பாடசாலை,
யா/உடுத்துறை இ.த.க ஆரம்ப பாடசாலை,
யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம்,
யா/ உடுத்துறை ம.வி வித்தியாலயம்,
யா/வெற்லைக்கேணி றோ.க பாடசாலை,
யா/கேவில் அ.த.க.பாடசாலை,
யா/தாளையடி றோ.க. பாடசாலை,
யா/கட்டைக்காடு றோ.க.பாடசாலை,
யா/வெற்றிலைக்கேணி
பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த
மற்றும் அதி கஸ்ரத்தில் உள்ள (202)மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி
வைக்கப்பட்டது.





Post A Comment:
0 comments so far,add yours