(காரைதீவு  சகா)


 தேசிய ரீதியிலான தரம் 1 மாணவர்களுக்கான செயல்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம்  அங்குரார்ப்பண நிகழ்வு  நாவிதன்வெளி அன்னமலை
 மகா வித்தியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

 இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.


 மாணவர்களுக்கான நவீன வகுப்பறையில் மாணவர்களுக்கு செயற்பாட்டு அடிப்படையிலான ஆங்கில பாடம் கற்பித்தல் ஸ்மார்ட் டிவி மூலம் ஆங்கில ஆசிரியை திருமதி எஸ்.ஹரிப்பிரியாவால் நடாத்தப்பட்டது.

அதிபரின் ஆரம்ப உரையை தொடர்ந்து உதவிக் கல்வி பணிப்பாளரின் உரை இடம்பெற்றது.
 
  பிரதி அதிபர் ந.வன்னியசிங்கம் ஆசிரியர்களான திருமதி எம்.ஆர்.குமாரராசா, திருமதி விஜயபிருந்தா பிரதீபன், திருமதி வி. சிவப்பிரியா, என்.கோடீஸ்வரன் மற்றும் தரம் 1 மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours