ஜனாதிபதியின்
பணிப்புரைக்கு இணங்க நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் இலவசமாக சமுர்த்தி
பயனாளிகளுக்கு அரிசி வழங்கும் வேலைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும்
மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் முதற் கட்டமாக
கல்லடி முகத்துவார பகுதி மக்களுக்கு இவ்விலவச அரிசி விநியோகம் பிரதேச
செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் அண்மையில் (26) முகத்துவார கிராம
உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
மண்முனை
வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பயனாளிகள், முதியோர், வலது குறைந்தோர்,
சிறு நீரக பாதிப்பு ஆகியவற்றில் இனங்காணப்பட்ட வறிய குடும்பங்களை சேர்ந்த
சமுர்த்தி உதவி பெறும் 100 பயனாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ
வீதம் அரிசி விநியோகிக்கப்பட்டது.
இவ்வேலைத்
திட்டத்தின் அரிசி பொதிகள் மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களுக்கு
மொத்தமாக 15313 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments so far,add yours