(((கனராசா சரவணன்)

இன்று நாட்டில் திட்டமிட்டு தமிழர் பிரதேசதிலுள்ள தொண்மையான பழமையான ஆலையங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்குகின்ற செயற்பாடு தீவிரமடைந்துள்ளது எனவே இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வரும் 25ம் திகதி வடக்கு கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்தாலுக்கு வர்த்தக சங்கத்தினரும் அரசியல்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழரசு கட்சி அம்பாறை மாவட்ட நா.உறுப்பினர் தவராசா கலையரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாவிதன்வெளியில் அமைந்துள்ள நா. உறுப்பினரது காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவார் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் போர்சூழல் இருந்த காலத்தைவிட மிக மோசமான செயற்பாட்டை தமிழர்பகுதியில் அரச படையினரும் பௌத்த மத தலைவர்களும்  அரசியல வாதிகளுமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எனவே தமிழ் மக்களை பொறுத்தமட்டிலே நீண்டகாலமாக இந்த நாட்டிலே சமாதானத்தை ஏற்படுத்த எமது ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுத்திருந்தாலும் கடந்த காலத்தில் கோட்டபாய ராஜபக்ஷhவினால் முன்னெடுக்கப்பட்ட தொல்பொருள் செயலணி என்பது மிக மோசமான தமிழர் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் செயற்பாடு இதனை உடனடியா நிறுத்தவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடப்பாடாக உள்ளது

இப்பெழுது நாட்டிலே பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டபொழுது சர்வதேசத்தின் உதவியை நாடியிருந்தனர்.அப்போது  அந்த அடிப்படையில் இந்த நாட்டிலே ஒரு சமாதான எற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களது பிரச்சனையை தீர்த்துவைப்பேன் என ஜனாதிபதி கோரிக்கையை முன்வைத்ததையடுத்து சர்வதேசம் நிதிகளை வழங்கியுள்ளது ஆனால் அது கூட நடக்கவில்லை  எனவே சமாதானத்தை கட்டியொழுப்ப வேண்டுமாயின் தமிழர்களுடைய பிரச்சனையை விரைவில் தீர்க்கவேண்டும்.

அதற்கப்பால் கோட்டபாய ராஜபஷவினால் நிறுவப்பட்ட தொல்பொருள் செயலணியை உடனடியாக நிறுத்தி பயங்கரவாத தடைச் சட்டம் என்கின்ற அந்த பயங்கரவாத செயற்பாட்டை நிறுத்தவேண்டும்.

இன்று மக்கள் மத்தியிலே குழப்பத்தை அல்லது ஒரு மோசமான நிலையை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே இந்து ஆலையங்களை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அதனை உடன் நிறுத்தவேண்டும்

இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து தொல் பொருட்களும் பௌத்த மதத்தை பிரதிபடுத்துவதாக அமையவில்லை ஆனால் இந்து மதம் சார்ந்த விடையங்களும் இருக்கின்றது அவ்வாறு இருக்கின்றபோது உண்மையை சொல்லவேண்டும்.

அதைவிடுத்து இந்த நாடு ஒட்டுமொத்தமாக ஒரு பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே இந்த செயற்பாடுகளை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுமாக சோர்ந்து எதிர்வருகின்ற 25 ம் திகதி இந்த நாட்டிலே எங்களுடைய எதிர்பை வெளிபடுத்தி நாட்டிலே வாழுகின்ற தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள், என்ற அடிப்படையில் ஒரு சமாதானத்தை கட்டியொழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பூரண ஹர்தாலுக்கு அழைப்பை விடுக்கின்றோம் என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours