தொகுப்பு -சா.நடனசபேசன் ஊடகவியலாளர்
சுனாமிப் பேரலையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பெரியநீலாவணை பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு Uk இல் இயங்கிவரும் வட்ஸ் அமைப்பினால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பெரியநீலாவணை தொடர்மாடித்தொகுதியில் இலவச வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதியில் 700 குடும்பங்கள் வசித்துவருவதுடன் இவர்களது ஜீவனோபாயமாக கடற்றொழில் ,கூலி வேலை என்பவற்றை நம்பியே வாழ்ந்துவரும் இம்மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டில் தரம் 5 இல் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களுக்காக 2018 ஆம் ஆண்டு அவ் மாணவர்கள் தரம் 4 கல்விகற்றுக்கொண்டிருந்தபோது இவ் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வகுப்பு 2018 இல் ஆரம்பிக்கும் போது மொத்தமாக 24 மாணவர்கள் கல்வி கற்றனர் இவர்களுக்கு கற்பிப்பதற்கு சா.நடனசபேசன் ஆசிரியர் அவர்களும் உதவியாளராக ம.பிரியதர்சினி அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
2019 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் தரம் 1,2,3,4,5 ஆகிய தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப் பட்டிருந்ததுடன் தரம் 6 இற்கு கணிதம் ,தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானப் பாடங்டகளும் ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இதில் தரம் 1,2 இற்கான ஆசிரியராக இ.இலக்சா அவர்களும் உதவியாளராக கே.சனுஜா அவர்களும் நியமிக்கப்பட்டதுடன் தரம் 3,4,5,6 இற்கான ஆங்கிலப் பாடத்திற்கு கே.டேவிட் அவர்கள் நியமிக்கப்பட்துடன் தரம் 3,4,5 ஆதிய தரங்களுக்கு சா.நடனசபேசன் ஆசிரியர் அவர்கள் தமிழ், கணிதம், சுற்றாடல் பாடங்களை கற்பித்து வந்தார் தரம் 6 இற்கு கணிதப் பாடத்தினை எஸ்.எழில்வேந்தன் ,தமிழ் பாடத்தினை க.பாக்கியராசா, விஞ்ஞானப்பாடத்தினை எம்.தர்சன் ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு நியமிக்கப்பட்டு தொடர்ச்சியாக கற்பித்தல் செயற்பாடு இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2020 டிசம்பர் மாதம் உலகலாவிய ரீதியில் கொவிட் 9 தொற்று பரவியமையால் இவ் வகுப்புக்கள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன பின்னர் கொவிட் தொற்று இலங்கையில் ஓரளவு குறைவடைந்து வந்தநிலையில் இவ்வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தன.
அவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் இவ்வகுப்பை ஆரம்பிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களிடம் முன்வைத்திருந்தனர் இக்கோரிக்கையினை Uk வட்ஸ் அமைப்பினரிடம் முன்வைத்தபோது முதற்கட்டமாக தரம் 5 இற்கான வகுப்பினை ஆரம்பிக்கும்படி தெரிவித்திருந்தனர். அதன்பால் 2021 டிசம்பர் மாதம் தரம் 5 இற்கான வகுப்புக்கள் நடைபெற்றுவந்து அம்மாணவர்கள் 2022 பெப்ரவரி மாதம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அதனைத் தொடர்ந்து 2022 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கு அவ் ஆண்டு மார்ச் மாதம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் ஏனைய செலவுகளுக்கான நிதியினையும் Uk வட்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் அவ்வருடம் மே மாதத்தில் இருந்து தரம் 1,2,3,4,5,6,7,8,910 தரங்களுக்கான வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன இங்கு கற்கும் மாணவர்களுக்கு ஆரம்பவகுப்புக்களைத்தவிர ஆங்கிலம்,கணிதம்,விஞ்ஞானம்,தமிழ்,வரலாறு ஆகிய பாடங்கள் நடைபெற்று வருகின்றன. இதில்
ஆசிரியர் பெயர் கற்பிக்கும்தரம் பாடம்
கே.மலர்மதி 1,2 தமிழ்,கணிதம்,சுற்றாடல்
சா.நடனசபேசன் 3,4,5 தமிழ்,கணிதம்,சுற்றாடல்
எஸ்.எழில்வேந்தன் 6-9 கணிதம்
எம்.தர்சன் 7-9 விஞ்ஞானம்
கே.டேவிட 3-6 ஆங்கிலம்
எஸ்சந்திரகுமார் 7-8 ஆங்கிலம்
க.பாக்கியராசா. 6-7 தமிழ்
எஸ்.சுரேஸ் 8-9 தமிழ்
இ.ஜீவராஜ் 8-9 வரலாறு
சு.மதன்ராஜ் 10 கணிதம்
கு.சுகதாசன் 6 விஞ்ஞானம்
ஆகியோர் தற்பொழுது கற்பித்துவருகின்றனர் இவ் வகுப்புகுளுக்கான இணைப்பாளராக ம.பிரியதர்சினி செயற்பட்டு வருகின்றார்.
இவ் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் தடைவையாக 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றி அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்தனர் இதில்மாணவர்பெயர் பெற்றுக்கொண்ட புள்ளி
1.சி.கெனாலியா 165
2.ர.விதுஜா 162
3.ஆ.டிலுக்ஷிகா 153
4.அ.ஆகாஸ் 162
5.மு.நதிக்ஷா 156
6.சு.நிதர்சன் 156
2020 சித்தியடைந்த மாணவர் விபரம்
1.ந.கபிலாசினி 162
2021 சித்தியடைந்த மாணவர் விபரம்
1.த.சஜீத் 160
2.ப.கதுமிதன் 159
தற்போது இவ் மாலைநேரவகுப்பில் தரம் 1- 9 வரை 168 மாணவர்கள் கல்விகற்றுவருகின்றனர்
வகுப்பு மாணவர் எண்ணிக்கை
தரம் 1 17
தரம் 2 20
தரம் 3 22
தரம் 4 16
தரம் 5 14
தரம் 6 22
தரம் 7 18
தரம் 8 13
தரம் 9 16
தரம் 10 16
இவ்வகுப்பில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான மாதாந்த வேதனம் மற்றும் ஏனைய செலவுகளடங்கலாக 189000 தொடக்கம் 200000.00 இற்குள் செலவாகின்றது இதற்கான நிதியினை மாணவர்களின் நலன்கருதி Uk வட்ஸ் அமைப்பினரால் வழங்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடானது சுனாமியால் நலிவுற்ற மக்களை கல்வியில் கரைசேர்ப்பதற்கான வழியாக இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கற்றசமூகம் சுட்டிக்காட்டுகின்றது
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அம்பாரை மாவட்டத்தில் உள்ளபல கிராமங்களில் இருந்து 2009 ஆண்டு பின்லாந்து நாட்டு அரசினால் அமைக்கப்பட்ட செஞ்சிலுவைச்சங்கத்தின் தொடர்மாடித்தொகுதியில் 2009.08.17 ஆம் திகதி குடியமர்த்தப்பட்வர்கள் அங்கு சுமார் 700 குடும்பங்கள் வசித்துவருகின்றன
இம் மக்களின் துயரினைத் துடைக்கும் நோக்கில் Uk வட்ஸ் அமைப்பானது 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தில் பாதிக்கப்பட்ட 474 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்ததுடன் 2021 ஆம் ஆண்டு கொவிட் 9 பாதிக்கப்பட்டு நாடு முற்றாக முடக்கப்பட்டிருந்தவேளையில் 600 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைத்திருந்தனர் இச்சேவைகள் அனைத்தும் வட்ஸ் அமைப்பின் கல்விச்சேவைக்கு அடுத்ததாக வாழ்வாதரா உதவியாகவே அனைவராலும் பார்க்கக்கூடியதாக இருந்தாலும் இவ் அமைப்பினுடைய சேவைகளை கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேசசெயலாளர் அதிசயராஜ் அம்பாரைமாவட்ட மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் போன்ற அதிகாரிகள் பாரட்டுக்களையும் தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.இவ்வகுப்பிற்கு பொறுப்பு அதிபராக வே.தங்கவேல் அவர்களும் ஆலோசகர்களாக இ.சந்திரசேகரம் ஓய்வுநிலை பொறியியலாளர் சர்வானந்தா ஆகியோரும் செயற்பட்டுவருவதுடன் பெரியநழுPலாவணைக் கிளையின் தலைவராக பாவாணர் அக்கரைப்பாக்கியன் செயலாளராக பிரியதர்சினி பொருளாளராக தர்சன் ஆகியோர் செயற்படுத்திவருகின்றனர்அதேவேளை இவ் அமைப்பானது தானக முன்வந்து செய்யும் கல்விச்சேவையினை இலங்கயில் இயங்கிக் கொண்டிருக்கும் பல முன்னணி ஊடகங்களும் பல பாராட்டுக்களையும் ஊடகப் பரப்புரைகளையும் செய்துவருகின்றமை போற்றத்தக்கதாக இருக்கின்றது .தன்னலம் பாராது தங்களது ஏழைச் சிறல்களுக்கு செய்துவரும் இச்சேவைகளை அப்பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் Uk வட்ஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்றிதெரிவித்துள்ளமை விஷேட அம்சமாகும்


.jpeg)








Post A Comment:
0 comments so far,add yours