பாறுக் ஷிஹான்




கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த இப்தார் வைபகமும் தாறுஸ்ஸபா அமைய பிரதானி மௌலவி உஸ்தாத் ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் தாறுஸ்ஸபா அமைய தலைமையகத்தில் இடம்பெற்றது

ஹிஜ்ரி 1444 றமழான் 17 - 2023 ஏப்ரல் 09 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிசினை தொடந்து கொடியேற்றப்பட்டதுடன் வருடாந்த இப்தார் வைபகமும் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் உலமாக்கள்,   முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் நிர்வாகிகள், கலை,அரசியல், இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours