(வி.ரி.சகாதேவராஜா)
இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் இணைந்து
அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள் தொடர்பான விபரங்களை திரட்டும்
பணி பிரதேசம் பிரதேசமாக இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் திருக்கோவில்,ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட ஆலயங்கள், இந்து மன்றங்கள், கலைஞர்கள்,
அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர்கள், இந்து கலைமன்றங்கனை உள்ளடக்கி இச்செயலமர்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும்
உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன், மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி
உத்தியோகத்தர் கு.ஜெயராஜி , திருக்கோவில் பிரதேச செயலக இந்து கலாசார
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ், மற்றும் கலாசார
உத்தியோகத்தர்கள் ஆலய தர்மகர்த்தாக்கள், நிருவாகத்தினர், கலஞர்கள் மன்ற
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்
போது ஆலயங்களின் அடிப்படைத் தகவல்கள், ஆலயத்தின் வரலாற்றுத் தகவல்கள்,
ஆலய மூர்த்தங்கள் தொடர்பான விபரங்கள், ஆலய உட்கட்டமைப்பு தொடர்பான
தகவல்கள், ஆலயத்தின் வழிபாடு தொடர்பான் விடையங்கள், ஆலய நிர்வாகம் தொடர்பான
விபரங்கள், ஆலய குருமார் தொடர்பான விபரங்கள், ஆலயத்தின் துணை
நிறுவனங்களின் தகவல்கள் அதாவது அறநெறிப்பாடசாலை,திருப்பணிச்சபை ,
அன்னதானசபை, இளைஞர் மன்றங்கள் தொடர்பான விபரங்கள், ஆலயத்தின் நிதி தொடர்பான
விபரங்கள், ஆலய பிணக்குகள் தொடர்பான தகவல்கள், ஆலயத்தினால்
முன்னேடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்கள்,




Post A Comment:
0 comments so far,add yours