நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றாடலில் வெப்பநிலை வழமையை விட உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.
சிறுவர்கள்,
4 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், கடுமையாக
சேர்வடைவோர் மற்றும் நோயாளர்கள் விசேடமாக அவதானத்துடன் செயற்படுவது
முக்கியமானதாகும்.
தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையினால் உடலில் ஏற்படும் தாக்கத்தை குறைத்துக்கொள்வதற்கு கூடுதலான நீரைப் பருகுதல் வேண்டும்.
விசேடமாக சிறுவர்களும் மற்றும் வயதானவர்களும் அதிகளவான நீரைப் அருந்துதல் வேண்டும்.
உடல் பயிற்சியில் காலை அல்லது மாலையில் ஈடுபடுதல் பொருத்தமானதாகும்.
உடல்
பயிற்சியில் ஈடுபடுவோர் அடிக்கடி பயிற்சியை நிறுத்தி நிழலில்ஓய்வெடுப்பது
பொருத்தமானதாகும். சிறுவர்கள், ஏனைய நபர்கள் முடிந்தளவு எப்பொழுதும்
உள்ளரங்குகளில் அல்லது நிழலான இடங்களில் இருக்க வேண்டும்.
குளிர்மையான இடத்தில் இருத்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் அல்லது உடம்பை கழுவுவதன் மூலம் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.
மென்மையாக
உடைகள், தலையை மூடும் அளவிலான துணிகள், சூரிய ஒளி தலையில் படாத வகையில்
தொப்பி, குடை போன்றவற்றை அணிவது பொருத்தமானதாகும்.
இவ்வாறான
காலப்பகுதியில் பொது மக்கள் மேற்கொள்ளக்கூடாத சில விடயங்களும் உண்டு.
வெப்பமான உணவு அல்லது திரவம் விசேடமாக சூடான தேனீர் அருந்துவதை தவிர்த்து,
வெள்ளரி, இளநீர், போன்ற இயற்கையான பானங்களை பருக வேண்டும்.
நபர்
ஒருவர் உடல் சோர்வுக்கு உள்ளாகும் பொழுதும், மூச்சு எடுப்பதில் சிரமம்
போன்றவை ஏற்படுமாயின் உடனடியாக பணிகளை நிறுத்தி நிழல் காணப்படும் இடம்
அல்லது குளிரான இடங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைப்
பாரம் அல்லது மயக்க நிலை ஏற்படுமாயின் ஏனையோருக்கு தெரிவிக்க வேண்டும்.
சூரிய ஒளியினால் சருமம் சிவப்படைதல் மற்றும் உடல் அரிப்பு, சில வேளைகளில்
தீக்காயம் அல்லது கொப்பளங்கள் ஏற்படக்கூடும்.
தீக்காயங்கள் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் பொருத்தமான வைத்தியரை நாடுவது சிறந்ததாகும்.
உடல் வெப்ப நிலை அதிகரித்தால் பக்கவாதமும் ஏற்படக்கூடும் எனவே
புத்திசாலித்தனத்துடன்
செயற்படுதல் மற்றும் வைத்திய ஆலோசனையை பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான அதிக
வெப்பநிலையுடனான காலத்திலான பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என
சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours