( வி.ரி.சகாதேவராஜா)
தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்
சந்திரசேகரம் ராஜனின் வீடு நேற்று(24) நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளானது .
கல்முனை
பெரிய நீலாவணைப் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஒரு மணி அளவில் வந்த
இனந்தெரியாத கோஷ்டினர் பிரதான வாயிலே உடைத்து உள்நுழைந்ததாக போலீசில்
முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
பெரியநீலாவணை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சந்திரசேகரன்
ராஜன் இன்றைய வடக்கு கிழக்கு ஹர்த்தால் கடை அடைப்பு முன்னிட்டு நேற்றும்
நேற்றுமுன்தினமும் கல்முனை பிராந்தியத்திலுள்ள கடைகளில் ஆதரவு தருமாறும்
கடைகளை அடைக்குமாறும் கோரி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .இதன்
எதிரொலியாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜனிடம் இதுபற்றி கேட்ட பொழுது .
நேற்று
இரவு நானும் மனைவியும் எனது மகனும் ஆழ்ந்த நித்திரை தூக்கத்தில் இருந்த
பொழுது திடீரென்று திடீர் திடீரென சத்தங்கள் கேட்டன .நேரத்தை பார்த்தேன்
ஒரு மணி ஐந்து நிமிடமாக இருந்தது .மெதுவாக எழுந்து மின்விசிறியை
நிறுத்திவிட்டு வாயிலை யன்னல் வழியாக பார்த்தேன். வழமையாக எமது பிரதான
வாயிலில் மின்குமிழ் எரிந்து கொண்டிருக்கும்.ஆனால் அத்தருணம் அது
எரியவில்லை. ஆகவே விளங்கி விட்டது எமது வீடுதான் தாக்குதலுக்கு
இலக்காகுகின்றது என்று .அதனால் அச்சத்துடன் மகனின் வாயை பொத்திக்கொண்டு
வீட்டுக்குள்ளே இருந்தேன். சுமார் பத்து நிமிடங்கள் எமது வீட்டுக்கு
வெளியிலும் சிங்களத்தில் சிலர் கதைத்துக் கொண்டிருந்ததை ஓரளவுக்கு கேட்கக்
கூடியதாக இருந்தது.
பத்து
நிமிடத்திற்கு பிற்பாடு சத்தம் குறைந்ததும் நான் மாடிவுட்டு தொகுதியில்
உள்ள எனது நண்பர்களிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டதும் அவர்கள் எனது
இடத்திற்கு வந்தார்கள். அதன் பிறகு நானும் வெளியில் வந்தேன். அப்பொழுதுதான்
எனது கேட் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே நீலாவணைப் பொலிஸ்
பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி எடுத்தேன் .அவர் அந்த வேளையில் எடுக்கவில்லை .
காலையில் இதனை முறைப்பாடு செய்திருந்தேன். இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவிடமும் எனது முறைப்பாட்டை சமர்ப்பிக்கிறேன் .
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours