( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய தனிமைப் படுத்தப்பட்டுள்ள துரைவந்திமேடு எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுசிறுமி
மாபெரும் இரண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

இவர் தனது இரண்டு கைகளாலும் A-Z வரை குறுகிய நேரத்தில் எழுதி உலக சாதனையை படைத்துள்ளார். 

அவர் 2.38 நிமிடங்களில் இரு கரங்களினாலும் A - Z  வரை எழுதி இச் சாதனையை படைத்துள்ளார்.

அவரின் சாதனையை அவரே முறியடித்து 2 உலக சாதனைகளை படைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செல்வி. கிரண்யாஸ்ரீ.
முதலாவது சாதனை A-Z =3.30          நிமிடங்களில் நிகழ்த்தியிருந்தார். தற்போது
இரண்டாவது சாதனைA-Z=2.38   நிமிடங்களில் நிகழ்த்தியுள்ளார்ர் 

இவை இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இரண்டு உலக சாதனை நிறுவனங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டது . அதற்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குடும்பத்தில் ஒரே மகளான இவரின் தந்தை கலைஞராவார். தாய் ஒரு தாதிய உத்தியோகத்தராவார்.
தந்தை சுந்தரம் ஜனாசுகிர்தன் பிறந்தது  மட்டக்களப்பு ஆரையம்பதி, தற்பொழுது திருமணமகி கல்முனை துறைவந்தியமேடு எனும் கிராமத்தில் வசித்து வருகிறார் .
மனைவியின் பெயர் பாலு ஜயந்தினி, அவர் கல்முனை ஆதர வைத்தியசாலையில் தாதிய உத்தியோதராக பணிபுரிந்து வருகிறார். மர சிற்ப வடிவமைபபுக்களை செய்து வருவதுடன் சிற்பக்கலையை பகுதி நேர விரிவுரையாளராக பல்கலைக்கழகத்தில் கற்பித்து வருகிறார். 

தாய் பாலு ஜயந்தினி, அவர் கல்முனை ஆதர வைத்தியசாலையில் தாதிய உத்தியோதராக பணிபுரிந்து வருகிறார். 

பெற்றோருக்கு ஒரு பிள்ளை

அவரின் தந்தை  உலகில் மிகச் சிறிய சிவலிங்கத்தை மரத்தில் செதுக்கி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours