( வி.ரி. சகாதேவராஜா)
இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் இணைந்து
அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து கலைஞர்கள் தொடர்பான விபரங்களை திரட்டும்
பணி இடம் பெற்று வருகின்றது.
முதலாவது
கூட்டம் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் தலமையில்
காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நேற்று முன்தினம்
இடம்பெற்றது.
இதில்
கலஞர்கள் விபரங்கள்,கலைஞர்களின் ஆக்கங்கள், கலைஞர்கள் பெற்ற விருதுகள்
தொடர்பான விபரங்கள், சமூகத்தில் கலைஞர்களின் பங்களிப்பு, கலைஞர்களுக்கு
எதிர்காலத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.
இதில்
மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ,சம்மாந்துறை
இந்து"கலாசார உத்தியோகத்தர் திருமதி கெளசல்யவாணி,காரைதீவு இந்து கலாசார
உத்தியோகத்தர் திருமதி சி.சிவலோஜினி,கல்முனை வடக்கு இந்து கலாசார
உத்தியோகத்தர் திருமதி க.சுஜித்திரா,நிந்தவூர் கலாசார உத்தியோகத்தர்
திருமதி பா.சுஜிவனி,மற்றும் காரைதீவு,கல்முனை வடக்கு ,சம்மாந்துறை கலஞர்கள்
கலந்து கொண்டனர்.


Post A Comment:
0 comments so far,add yours