எஸ்.சபேசன்

சம்மாந்துறை கல்விவலயத்தின்  நாவிதன்வெளிக் கோட்டமட்ட விளையாட்டுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு  நேற்று நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் பூ.பரமதயாளன் அவர்களின் தலைமையில் 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

கடந்த 7 வருடங்களுக்குப்பின்னர் இவ்விளையாட்டுப்போட்டி  மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது இந்நிகழ்வில் 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலய அதிபர் எம்.தர்மலிங்கம்,கண்ணகி வித்தியாலய அதிபர் எஸ்.செல்வசிகாமணி மற்றும் பாடசாலைகளின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours