( காரைதீவு சகா)
 கல்முனை கே பி எல்( KPL) கிண்ணத்திற்கான போட்டியில் கலந்து கொள்ளும் பிரபல ஈஸ்டர்ன் ரோயல்ஸ் அணியினருக்கான புதிய சீருடை வெளியீட்டு நிகழ்வு நேற்று முன் தினம்(21) கல்முனையில் நடைபெற்றது.

 ஈஸ்ட்டர்ன் ரோயல்ஸ் அணியின் முகாமையாளரும் பிரபல தொழிலதிபருமான பாலசுப்பிரமணியம் ஜகந்நாத் தலைமையில் நடைபெற்ற சீருடை வெளியிட்டு விழாவில் சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா, முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , உவெஸ்லி கல்லூரி முன்னாள் அதிபர் வி. பிரபாகரன், பிரபல சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஷ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.
ஈஸ்டர்ன் ரோயல்ஸ்  வீரர்களுக்கு சீருடைகள் உபயோகிக்கப்பட்டன.
 ஈஸ்டர்ன் ரோயல் அணியின் அனுசரணையாளர்கள்  அபிமானிகள் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours