நூருல் ஹுதா உமர்


வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்பிற்கேற்ற பலனின்றி அவதியுற்று இருந்த தொழிலாளர்கள், ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் மேன்மையையும், உழைக்கும் மக்களின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றுகின்ற நாளாகவும் மே தினம் விளங்குகிறது எனவும் இன்றை நாளில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மேதின நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது உளமார்ந்த "மே தின" வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours