எஸ்.சபேசன்சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலைக்கான பெயர்ப் பலகையினை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கும் நிகழ்வு அதிபர் என்.பிரபாகர் தலைமையில் புதன்கிழமை இடம்பெற்றது.
வேப்பையடி உதயாவிளையாட்டுக்கழகத்தின் நிதி உதவி மூலம் பெயர்ப்பலகை அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் ஏனைய கட்டுமானவேலைகளுக்கான நிதி உதவிளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாடசாலையின் அதிபர் பிரபாகர் அவர்களது புதல்வரும் வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற அதிபர் பாலசிங்கன் மற்றும் இலங்கைவங்கி முகாமையாளர் கு.சசிதரன் உதயாவிளையாட்டுக்கழக உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.


.jpeg)



.jpeg)


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours