(வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை மேலும் இரு தினங்கள் அதாவது 27 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபர் ஜே.என்.டக்ளஸ் அறிவித்துள்ளார்.

குறித்த காட்டுப்பாதை கடந்த ( 12) திங்கட்கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது..

மீண்டும் அது ஜூன் 25 ஆம் திகதி மூடப்படும் என ஏலவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் களுதாவளை நற்பிட்டிமுனை ஆலயங்களின் தீர்த்தோற்சவம் காரணமாக அப் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப் பாதையை மேலும் இரு தினங்கள் திறந்துவைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 27 ஆம் தேதி வரை இப் பாதை திறந்திருக்கும்.


கதிர்காமம்  முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம்  ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 4  திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

கடந்த வருடம் 28820 பேர் காட்டுப் பாதையில் பயணித்திருந்தனர். இம்முறை 45 ஆயிரம் பேர் அளவில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, உகந்தை மலை  முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம்  ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours